10 ம் வகுப்பு மாணவர் தற்கொலை
இறந்து போன அப்பாவிடம் செல்வதாக அம்மாவுக்கு போன் செய்து விட்டு கோவையில் ௧௦ ம் வகுப்பு மாணவர் தற்கொலை செய்து கொண்டார்
கோவை
இறந்து போன அப்பாவிடம் செல்வதாக அம்மாவுக்கு போன் செய்து விட்டு கோவையில் 10-ம் வகுப்பு மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது
10-ம் வகுப்பு மாணவர்
கோவை நேருநகரை சேர்ந்தவர் சரவணன். இவருடைய மனைவி லட்சுமி (வயது 42). இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் இருந்த னர். சரவணன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.
இதனால் லட்சுமி தனது மகள் மற்றும் மகனுடன் திருப்பூர் கணியாம்பூண்டியில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
இவருடைய மகன் விக்ரம் (16) கோவை பீளமேட்டில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். தற்போது 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடப்பதால், விக்ரம், நேருநகரில் உள்ள லட்சுமி யின் நெருங்கிய தோழியான ராஜேஸ்வரி என்பவரின் வீட்டில் தங்கி தேர்வு எழுதி வந்தார்.
அப்பாவிடம் செல்கிறேன்
இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் விக்ரம் தனது அம்மா வின் செல்போனில் தொடர்பு கொண்டு எனக்கு அப்பா நியாப கம் அதிகமாக இருக்கிறது. நான் அவரிடம் செல்கிறேன் என்று கூறி உள்ளார்.
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் தனது மகனுக்கு ஆறுதல் மற்றும் அறிவுரை கூறினார். பின்னர் அவர் தனது தோழி ராஜேஸ்வரியை தொடர்பு கொண்டு தனது மகனை நன்றாக பார்த்துக்கொள்ளும்படி கூறி உள்ளார்.
இந்த நிலையில் விக்ரம் தங்கி இருந்த அறைக்குள் ஏதோ சத்தம் கேட்டது. உடனே ராஜேஸ்வரி அங்கு சென்று பார்த்தபோது மின்விசிறியில் விக்ரம் தூக்கில் தொங்கிக்கொண்டு இருந்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அக்கம் பக்கத்தினர் உதவியு டன் விக்ரமை மீட்டு அங்குள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென் றார். ஆனால் செல்லும் வழியிலேயே விக்ரம் பரிதாபமாக உயிரிழந்தார்.
வீடியோ பதிவு
இதை அறிந்த பீளமேடு போலீசார், விக்ரம் பயன்படுத்திய செல்போனை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில், எனக்கு வாழ பிடிக்கவில்லை. எப்போதுமே எனக்கு அப்பா நியாபகமாக இருக்கிறது. அப்பா தினமும் எனது கனவில் வந்து தன்னுடன் வந்துவிடுமாறு அழைத்துக்கொண்டே இருக்கிறார்.
எனவே எனக்கு வாழ பிடிக்கவில்லை. நான் அப்பாவிடமே சென்று விடுகிறேன், அம்மா, அக்கா என்னை மன்னித்துவிடுங்கள் என்று ஒரு சில நிமிடங்கள் ஓடும் வீடியோ காட்சி பதிவாகி இருந்தது.
இது குறித்து பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.