10-ம் வகுப்பு மாணவி தற்கொலை


10-ம் வகுப்பு மாணவி தற்கொலை
x

கெங்கவல்லி அருகே தேர்வு முடிந்து வீட்டுக்கு திரும்பிய மாணவியின் சீருடை மற்றும் முகத்தில் சக மாணவிகள் சாயம் பூசி இருந்ததை தாயார் கண்டித்ததால் மனம் உடைந்து மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

சேலம்

கெங்கவல்லி:

கெங்கவல்லி அருகே தேர்வு முடிந்து வீட்டுக்கு திரும்பிய மாணவியின் சீருடை மற்றும் முகத்தில் சக மாணவிகள் சாயம் பூசி இருந்ததை தாயார் கண்டித்ததால் மனம் உடைந்து மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

பள்ளி மாணவி

கெங்கவல்லி அருகே கூடமலை ஊராட்சி வனத்துறை பங்களா அருகே வசித்து வருபவர் நேரு, விவசாய கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி சத்தியா. இவர்களுடைய மகள் நித்தியா (வயது 15). இவர் கூடமலையில் அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

சமீபத்தில் 10-ம் வகுப்பு தேர்வு முடிந்து வீட்டுக்கு வந்த அந்த மாணவியின் சீருடை மற்றும் முகத்தில் சக மாணவிகள் சாயம் பூசி விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து வீட்டிற்கு வந்த நித்தியாவை, தாயார் சத்தியா திட்டி உள்ளார்.

விஷம் தின்றார்

இதில் மனம் உடைந்த நித்தியா கடந்த 1-ந் தேதி வீட்டில் இருந்த விஷத்தை சாப்பிட்டு விட்டு 2 நாட்களாக வீட்டில் இருந்து உள்ளார். 3-ந் தேதி உடல் நிலை மோசமானதை அடுத்து பெற்றோர் மாணவியிடம் விசாரித்தனர்.

அப்போது தான் அவர் விஷம் தின்றது தெரியவந்தது. இதையடுத்து அந்த மாணவியை, ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட மாணவி நித்தியா நேற்று அதிகாலையில் இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து கெங்கவல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story