10-ந்தேதி வல்லண்டராமம் பொற்கொடி அம்மன் புஷ்ப ரத ஏரித் திருவிழா
வல்லண்டராமம் பொற்கொடி அம்மன் கோவில் புஷ்பரத ஏரி திருவிழா 10-ந் தேதியையொட்டி உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் என ஆலோசனை கூட்டத்தில் கிராம மக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
அணைக்கட்டு
வல்லண்டராமம் பொற்கொடி அம்மன் கோவில் புஷ்பரத ஏரி திருவிழா 10-ந் தேதியையொட்டி உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் என ஆலோசனை கூட்டத்தில் கிராம மக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
ஏரித்திருவிழா
அணைக்கட்டு தாலுகா வல்லண்டராமம் கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற பொற்கொடி அம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவில் இணைக் கோவில் வேலங்காடு ஏரியில் உள்ளது. ஆண்டுக்கு ஒரு முறை சித்திரை மாதம் கடைசி புதன்கிழமை நடக்கும் புஷ்பரத ஏரித்திருவிழா மே மாதம் 9, மற்றும் 10-ந் தேதிகளில் நடைபெற உள்ளது.
இதனை முன்னிட்டு விழாவுக்கான ஏற்பாடுகள் குறித்து நேற்று மாலை வல்லண்டராமம் பொற்கொடி அம்மன் கோவில் வளாகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
நிகழ்ச்சிக்கு வேலூர் வருவாய் கோட்டாட்சியர் கவிதா தலைமை தாங்கினார். வேலூர் மாவட்ட அறங்காவல் குழு தலைவர் அசோகன், அணைக்கட்டு தாசில்தார் கி.வேண்டா, மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் சுகுமார், மதி, வட்டார வளர்ச்சி அலுவலர் சுதாகரன், ஊராட்சி மன்ற தலைவர் சைனலதா மணி, ஒன்றிய குழு உறுப்பினர் சிவஞானம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
பொற்கொடி அம்மன் கோவில் செயல் அலுவலர் அண்ணாமலை, விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் கோவில் செயல்அலுவலர் ஸ்ரீதர் ஆகியோர் வரவேற்று பேசினர்.
புஷ்ப ரதம் நிலை நிறுத்துதல்
கூட்டத்தில் வல்லண்டராமம், பனங்காடு, வேலங்காடு அண்ணாச்சி பாளையம் ஆகிய 4 கிராம மக்களின் முக்கிய நிர்வாகிகள் கலந்து ெகாண்டு திருவிழா நடத்துவது குறித்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.
விழா நடைபெறும் நாளான மே 10-ந் தேதி உள்ளூர் விடுமுறை வழங்க வேண்டும் என அவர்கள் கோட்டாட்சியரிடம் வலியுறுத்தினார். ஒன்பதாம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு 12 மணிக்கு அம்மன் புஷ்பரதத்தில் ஏரி ஊர்வலம் வரும்போது அந்தந்த கிராம மக்கள் சீக்கிரம் வழிபாடு செய்துவிட்டு காலை 10 மணிக்குள் வேலங்காடு ஏரிக்கு புஷ்ப ரதத்தை நிலை நிறுத்த வேண்டும். 2 மணி நேரம் ஏரியில் புஷ்ப ரதம் நிறுத்த வேண்டும் அப்போதுதான் வெளியூர்களிலிருந்து வரும் பக்தர்கள் முழுமையாக சாமி தரிசனம் செய்ய முடியும்.
புஷ்ப ரதத்தின் முன்பு ஆடு மற்றும் கோழிகளை பலியிட அனுமதி இல்லை, மாறாக ஆங்காங்கே உள்ள தென்னந்தோப்புகளில் வேண்டுதல்களை நிறைவேற்றிக் கொள்ளலாம். புஷ்பரத ஏரி திருவிழாவிற்கு பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவதால் குடியாத்தம், பள்ளிகொண்டா, ஒடுகத்தூர், கே.வி.குப்பம், வடுகன்தாங்கல், வேலூர் வழிதடங்களில் கூடுதலாக பஸ்கள் இயக்க போக்குவரத்து துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். பக்தர்களுக்கு குறைவின்றி குடிநீர் வினியோகம் செய்யும் வகையில் ஆங்காங்கே சின்டெக்ஸ் டேங்க் அமைக்கப்பட வேண்டும்.
கூடுதல் போலீசார்
திருட்டு சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க கூடுதலாக போலீசாரை நியமிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளும் முன் வைக்கப்பட்டன.
முடிவில் வல்லாண்டராமம் கோவில் மேலாளர் ஆறுமுகம் நன்றி கூறினார்.