11 அரசு பள்ளிகளுக்கு இலவச திறன் மேம்பாட்டு சாதனங்கள்
11 அரசு பள்ளிகளுக்கு இலவச திறன் மேம்பாட்டு சாதனங்களை கலெக்டர் மேகநாதரெட்டி வழங்கினார்.
11 அரசு பள்ளிகளுக்கு இலவச திறன் மேம்பாட்டு சாதனங்களை கலெக்டர் மேகநாதரெட்டி வழங்கினார்.
11 பள்ளிகள்
யூனிசெப் உதவியுடன் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கல்வி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பகுதிகளான நாலூர், புல்வாய்க்கரைப்பட்டி, குருந்தமடம், நத்தத்துப்பட்டி, பிள்ளையார் நத்தம், புதுச்சூரங்குடி, செட்டிகுளம், கல்குறிச்சி, தோணுகால், முடுக்கன்குளம், கண்மாய்ச்சூரங்குடி ஆகிய கிராமங்களில் உள்ள 11 அரசு உயர்நிலைப்பள்ளிகளுக்கு நீர், சுகாதாரம், தூய்மை உள்ளிட்ட அடிப்படை பணிகளை மேம்படுத்துவதற்காகவும், ஆங்கிலம், அறிவியல், கணிதம் போன்ற பாடங்களில் திறன் மேம்பாட்டுக்காக இணையதள வசதியுடன் கூடிய மடிக்கணினி உள்ளிட்ட சாதனங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஒரு பள்ளிக்கு ரூ.1.5 லட்சம் வீதம் மொத்தம் ரூ. 16.5 லட்சம் மதிப்பீட்டில் மடிக்கணினி மற்றும் சாதனங்கள் வழங்கப்பட்டது.
இணையவழி பயிற்சி
இந்நிகழ்ச்சியில் இணையவழி பயிற்சி தொடர்பான ஆலோசனைகளையும் அதன் முக்கியத்துவத்தையும் கலெக்டர் மேகநாத ரெட்டி எடுத்து கூறினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி, மாவட்ட கல்வி அலுவலர் திருப்பதி, உதவி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிவசக்தி, கணேஷ் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.