ஸ்குரு வடிவில் கடத்தி வரப்பட்ட ரூ.11 லட்சம் தங்கம் பறிமுதல்
ஸ்குரு வடிவில் கடத்தி வரப்பட்ட ரூ.11 லட்சம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
அதிகாரிகள் சோதனை
திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து இயக்கப்படும் விமானங்களில் சில பயணிகள் மூலம் தங்கம் கடத்தப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக அதிக அளவில் கடத்தப்பட்ட தங்கத்தை, சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதில் சில நாட்களுக்கு முன்பு திருச்சி விமான நிலையத்தில் ஒரு கிலோ 188 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சார்ஜாவில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நேற்று காலை 6.40 மணிக்கு திருச்சி வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
தங்கம் பறிமுதல்
அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்த பயணி ஒருவரை தனியே அழைத்து சென்று, அவரது உடமைகளை சோதனை செய்தனர். இதில் அவர் சூட்கேசில் தங்க ஸ்குருக்களில் உலோகம்(நிக்கல்) பூசப்பட்ட வடிவில் மறைத்து 186 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ.11 லட்சத்து 16 ஆயிரம் ஆகும்.இதையடுத்து தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் நாகப்பட்டினத்தை சேர்ந்த ஜாவித்(வயது 42) என்பது தெரியவந்தது. ெதாடர்ந்து அவரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.