முயல் வேட்டையாடிய 11 பேர் கைது


முயல் வேட்டையாடிய 11 பேர் கைது
x

உசிலம்பட்டி அருகே முயல் வேட்டையாடிய 11 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

மதுரை

உசிலம்பட்டி,

உசிலம்பட்டி அருகே முயல் வேட்டையாடிய 11 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

11 பேர் கைது

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செக்கானூரணியை அடுத்துள்ள செட்டிகுளம் பகுதியில் ஒரு சிலர் முயல் வேட்டையாடுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் உசிலம்பட்டி வனச்சரக அலுவலர் அன்பழகன் தலைமையிலான வனத்துறையினர் அதிரடி ஆய்வில் ஈடுபட்டனர்.

இந்த ஆய்வின் போது செட்டிகுளம் பகுதியில் முயல் வேட்டையாடிக் கொண்டிருந்த அடைக்கம்பட்டியைச் சேர்ந்த தினேஷ்குமார், வெள்ளைச்சாமி, ராஜ்குமார், அஜித், சின்னசாக்கிளிபட்டியைச் சேர்ந்த ராமசாமி, சவுந்திரபாண்டி, பழனிமுருகன், ராஜபாண்டி, கார்த்திக், அழகர் மற்றும் வெள்ளைப்பாறைபட்டியைச் சேர்ந்த வடிவேல் ஆகிய 11 பேரை உசிலம்பட்டி வனச்சரக அலுவலர்கள் கைது செய்தனர்.

ரூ.50 ஆயிரம் அபராதம் விதிப்பு

அவர்களிடமிருந்து 3 முயல்களை பறிமுதல் செய்தனர். முயல் வேட்டையாடியது தொடர்பாக 11 பேருக்கும் தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.5 லட்சத்து 50 ஆயிரம் அபராதம் விதித்தனர். வனவிலங்குகள் வேட்டையாடுவதோ, வீட்டில் வளர்ப்பதோ வன உயிரின பாதுகாப்பு சட்டப்படி தவறு என வனத்துறை அலுவலர்கள் அவர்களை எச்சரித்து அனுப்பினர்.


Related Tags :
Next Story