பணம் வைத்து சூதாடிய 11 பேர் கைது


பணம் வைத்து சூதாடிய 11 பேர் கைது
x
தினத்தந்தி 6 Nov 2022 12:15 AM IST (Updated: 6 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருநாவலூர் அருகே பணம் வைத்து சூதாடிய 11 பேர் கைது

கள்ளக்குறிச்சி

திருநாவலூர்

திருநாவலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் மற்றும் போலீசார் திருநாவலூர் பகுதியில் தீவிர ரோந்து பணியில் இருந்தனர். அப்போது கொராட்டங்குறிச்சி கிராமத்தில் சிலர் பணம் வைத்து சூதாடி வருவதை அறிந்த போலீசார் அங்கு சென்று அந்த கும்பலை சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர். போலீசாரை கண்டதும் அந்த கும்பல் அங்கிருந்து தலை தெறிக்க ஓடியது. எனினும் போலீசார் பின்தொடர்ந்து அவர்களை விடாமல் துரத்தியதில் 11 பேர் பிடிபட்டனர். விசாரணையில் இவர்கள் அதே பகுதியை சேர்ந்த சாரங்கன்(வயது 40), மணிகண்டன்(23), செல்வம்(19), முருகன்(40), ராஜா(30), சிவசேன(43), பழனி(35), சிவராமன்(35), குணா(18), பாபு(36), ஏழுமலை(32) என்பதும் பணம் வைத்து சூதாட்டம் ஆடியதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து ரூ.5 ஆயிரம் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர்.


Next Story