ஆசிரியையிடம் 11 பவுன் சங்கிலி பறிப்பு


ஆசிரியையிடம் 11 பவுன் சங்கிலி பறிப்பு
x

தஞ்சையில் ஓடும் பஸ்சில் ஆசிரியையிடம் 11 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தஞ்சாவூர்
தஞ்சை திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் சுப்ரமணியன். இவருடைய மனைவி அந்தோணியம்மாள் (வயது 52). இவர் தஞ்சையில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர் தஞ்சை புதுஆற்றுப்பாலம் அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் புதிய பஸ் நிலையத்திற்கு செல்லும் பஸ்சில் ஏறினார்.பின்னர் இவர், ஒரு ஆஸ்பத்திரி பஸ் நிறுத்தத்தில் பஸ் நின்றவுடன் கீழே இறங்கினார். அப்போது அவர் தனது கழுத்தில் அணிந்திருந்த 11 பவுன் சங்கிலி இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் பஸ்சில் ஏறி அங்கிருந்த பலரிடம் விசாரித்து பார்த்தும் நகைகள் குறித்து எந்தவித தகவலும் கிடைக்கவில்லை.

போலீசார் விசாரணை


ஓடும் பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்மநபர் யாரோ நகையை பறித்து கொண்டு தப்பி சென்று இருக்கலாம் என தெரிகிறது. இதுகுறித்து அந்தோணியம்மாள் தஞ்சை தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.



Next Story