11 லாரிகளுக்கு ரூ.2½ லட்சம் அபராதம்


11 லாரிகளுக்கு ரூ.2½ லட்சம் அபராதம்
x
தினத்தந்தி 23 Sept 2022 12:15 AM IST (Updated: 23 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

அதிக பாரம் ஏற்றிய 11 லாரிகளுக்கு ரூ.2½ லட்சம் அபராதம்

கன்னியாகுமரி

தக்கலை,

கொற்றிக்கோடு சப்-இன்ஸ்பெக்டர் ரசல்ராஜ் மற்றும் போலீசார் சித்திரங்கோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 11 லாரிகளை நிறுத்தி சோதனையிட்ட போது அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து லாரிகளை எடைமேடைக்கு கொண்டு சென்று கூடுதல் எடைக்கு ஏற்ப அபராதம் விதித்தனர். அதன்படி 2 லாரிகளுக்கு தலா ரூ.26 ஆயிரம் வீதமும், 9 லாரிகளுக்கு தலா ரூ.24 ஆயிரம் வீதமும் என மொத்தம் ரூ.2 லட்சத்து 68 ஆயிரம் அபராதம் விதித்தனர்.


Next Story