தூய்மை காவலர்களுக்கு 11 வகையான உபகரணங்கள்
பெரணமல்லூர் ஒன்றியத்தில் தூய்மை காவலர்களுக்கு 11 வகையான உபகரணங்களை ஒன்றிய குழு தலைவர் வழங்கினார்.
திருவண்ணாமலை
சேத்துப்பட்டு
பெரணமல்லூர் ஒன்றியத்தில் தூய்மை காவலர்களுக்கு 11 வகையான உபகரணங்களை ஒன்றிய குழு தலைவர் வழங்கினார்.
திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 57 கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மை காவலர்களுக்கு மண்வெட்டி, கோடரி, கடப்பாரை, முதல் உதவிப்பெட்டி, சீருடைகள், கையுறை உள்ளிட்ட 11 வகையான உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அ.பெ.வெங்கடேசன், பெ.மோகனசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பெரணமல்லூர் ஒன்றியக்குழு தலைவர் இந்திரா இளங்கோவன் தலைமை தாங்கி ரூ.18 லட்சம் மதிப்புள்ள உபகரணங்களை வழங்கினார்.
இதில் அலுவலக மேலாளர் பாஸ்கரன், கணக்காளர் ரவி, வட்டார திட்ட ஒருங்கிணைப்பாளர் கலைச்செல்வி ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஹரிகுமார் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story