சாராய வேட்டையில் 10 நாளில் 119 பேர் கைது


சாராய வேட்டையில் 10 நாளில் 119 பேர் கைது
x

சாராய வேட்டையில் 10 நாளில் 119 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருப்பத்தூர்

சாராய வேட்டையில் 10 நாளில் 119 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருப்பத்தூர் சாராயம் மற்றும் மதுவை முற்றிலுமாக ஒழிக்கும் நோக்கத்தேடு கடந்த 10 நாட்களாக மதுவிலக்கு வேட்டை நடைபெற்று வருகிறது. மாவட்டம் முழுவதும் 9 சப்-இன்ஸ்பெக்டர்கள், 33 போலீசார் கொண்ட சிறப்பு குழு நடத்திய மதுவிலக்கு சோதனையில் 140 வழக்குகள் பதியப்பட்டுள்ளது.

இதில் 2 ஆயிரத்து 54 லிட்டர் சாராயம், 907 லிட்டர் மது பாட்டில்கள், 20 ஆயிரத்து 600 லிட்டர் சாராய ஊறல், நான்கு சக்கர வாகனமும், மற்றும் 2மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டு 119 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் ஒருவர் மீது தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

சாராயம் காய்ச்சுபவர்கள், விற்பவர்கள், சட்டவிரோதமாக மது பாட்டில்கள் கடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story