84 பேருக்கு ரூ.12¼ கோடியில் நலத்திட்ட உதவிகள்


84 பேருக்கு ரூ.12¼ கோடியில் நலத்திட்ட உதவிகள்
x

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் 84 பேருக்கு ரூ.12¼ கோடியில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்.

தஞ்சாவூர்

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் 84 பேருக்கு ரூ.12¼ கோடியில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்.

நலத்திட்ட உதவிகள்

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்றுமாலை நடந்தது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை தாங்கினார்.

இதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு பல்வேறு துறைகள் சார்பில் 84 பேருக்கு ரூ.12 கோடியே 30 லட்சத்து 23 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்.

அங்கன்வாடி கட்டிடம்

அதேபோல் தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு துறைகள் சார்பில் ரூ.4 கோடியே 16 லட்சத்து 13 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 22 புதிய கட்டிடங்களை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.

தஞ்சையை அடுத்த பூதலூர் ஒன்றியத்தில் 8 ஊர்களில் ரூ.92.79 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டிடம், திருக்காட்டுப்பள்ளி மற்றும் அகரப்பேட்டையில் ரூ.42 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலக கட்டிடம், கூடநாணல் கிராமத்தில் புதிதாக ரூ.38 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள துணை வேளாண்மை அலுவலகம் ஆகியவற்றை அமைச்சர் திறந்து வைத்தார்.

மானியத்தில் பவர் டில்லர்

வேளாண்மை பொறியியல்துறை சார்பில் விவசாயிகளுக்கு மானியத்தில் பவர் டில்லர் வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்தார். இதையடுத்து திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் 42 பேருக்கு ரூ.34 லட்சத்து 24 ஆயிரம் மதிப்பிலும், ஒரத்தநாடு வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 41 பேருக்கு ரூ.34 லட்சத்து 18 ஆயிரம் மதிப்பிலும் என மொத்தம் ரூ.68 லட்சத்து 42 ஆயிரம் மதிப்பில் பவர் டில்லர்களை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார். தஞ்சை மாவட்டத்தில் மொத்தம் 181 பேருக்கு ரூ.1 கோடியே 53 லட்சத்து 84 ஆயிரம் மதிப்பில் பவர் டில்லர் வழங்கப்பட்டது.

கலந்து கொண்டவர்கள்

நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம், மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஸ்ரீகாந்த், மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா, வேளாண்மை பொறியியல்துறை செயற்பொறியாளர் செல்லக்கண் ஞானசீலன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, மாநகராட்சி துணை மேயர் அஞ்சுகம்பூபதி, ஒன்றியக்குழு தலைவர்கள் கல்லணை செல்லக்கண்ணு, அரசாபகரன், பார்வதி சிவசங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story