மாதனூர் டாஸ்மாக் கடைக்கு 12-ந்தேதி விடுமுறை
மாதனூர் டாஸ்மாக் கடைக்கு 12-ந்தேதி விடுமுறை விடப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருப்பத்துர் மாவட்டம் மாதனூர் ஒன்றியம் நாய்க்கனேரி ஊராட்சியில் உள்ளாட்சி தேர்தல் சனிக்கிழமை நடக்கிறது. 12-ந்தேதி மாதனூர் ஒன்றிய அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நடக்க உள்ளது.
எனவே மாதனுர் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடைக்கு 12-ந்தேதி விடுமுறை ஆகும். மீறி மதுபானக் கடையை திறந்தாலும், மது விற்றாலும் தெரிய வந்தால் உரிமம் தற்காலிகமாக நிறுத்தி வைத்தல் மற்றும் உரிமம் ரத்து செய்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story