சரக்கு ஆட்டோ கவிழ்ந்து 12 பேர் காயம்திருமணத்துக்கு சென்றுவிட்டு திரும்பியபோது விபத்து
சரக்கு ஆட்டோ கவிழ்ந்து
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள நவப்பட்டி காலனியை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 32). கரும்பு வெட்டும் தொழிலாளி. இவருடைய மனைவி ராதா.
ராதாவின் உறவினர் ஒருவருக்கு ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே நிச்சாம்பாளையத்தில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்ததும் குணசேகரன் உள்பட 16 பேர் சரக்கு ஆட்டோவில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தனர். சரக்கு ஆட்டோவை நிச்சாம்பாளையத்தை சேர்ந்த வெங்கடாஜலம் (36) ஓட்டினார். குணசேகரன் உள்பட 16 பேர் சரக்கு ஆட்டோவில் இருந்தனர். திங்களூா் அருகே வந்தபோது எதிர்பாராதவிதமாக சரக்கு ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் குணசேகரன் உள்பட 12 பேர் காயம் அடைந்தனர். உடனே 12 பேரும் மீட்கப்பட்டு பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதுபற்றி திங்களூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.