நெல்லையப்பர் கோவிலில் ரூ.12½ லட்சம் உண்டியல் காணிக்கை


நெல்லையப்பர் கோவிலில் ரூ.12½ லட்சம் உண்டியல் காணிக்கை
x

நெல்லையப்பர் கோவிலில் ரூ.12½ லட்சம் உண்டியல் காணிக்கை கிடைத்தது.

திருநெல்வேலி

நெல்லை டவுன் நெல்லையப்பர்- காந்திமதி அம்மன் கோவிலில் 21 உண்டியல்கள் உள்ளது. இந்த உண்டியல்கள் கடந்த ஆகஸ்டு மாதம் 30-ந்தேதி திறந்து காணிக்கை எண்ணப்பட்டன.

இந்தநிலையில் நேற்று 21 உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன. இதற்கு கண்காணிப்பு அதிகாரியாக நாகர்கோவில் இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் தங்கம், நெல்லை மேற்குப் பிரிவு ஆய்வர் தனலெட்சுமி (எ) வள்ளி, தக்கார் பிரதிநிதியாக கங்கைகொண்டான் ஆய்வர் முருகன் ஆகியோர் பங்கேற்றனர்.

நெல்லையப்பர் கோவில் செயல் அலுவலர் அய்யர் சிவமணி, நெல்லை சந்திப்பு ம.தி.தா இந்து மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள், அத்திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சொக்கலிங்கம், சோமசுந்தரம் மற்றும் ராஜகோபுரம் சேவா குழுவினர் ஆகியோர் உண்டியல் காணிக்கைகள் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். உண்டியல்கள் திறப்பில் ரூ.12,54,854 ரொக்கமும், 525 கிராம் எடையுள்ள பல மாற்றுப் பொன் இனங்களும், 230 கிராம் எடையுள்ள பலமாற்று வெள்ளி இனங்களும் கிடைக்கப் பெற்றன. மேலும் வெளிநாட்டுப் பணத்தாள்கள் 17-ம் கிடைத்தது.


Next Story