குட்கா, லாட்டரி விற்ற 12 பேர் கைது


குட்கா, லாட்டரி விற்ற 12 பேர் கைது
x
தினத்தந்தி 5 July 2023 1:00 AM IST (Updated: 5 July 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

ஓசூர்:-

கிருஷ்ணகிரி தர்மராஜா கோவில் அருகிலும், சூளகிரி அருகே ஓசூர் -கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையோரம் லாட்டரி சீட்டு விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்த லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர். அதேபோல், பெட்டிக்கடைகளில் புகையிலை பொருட்கள் விற்ற பேராணம்பட்டு வெற்றிவேல் (வயது 22), ஊத்தங்கரை அடுத்த அம்மன் கோவில்பதி சிவலிங்கம் (49), ஓசூர் ரவி (45), உத்தனப்பள்ளி அக்கிராஜப்பா (60) உள்பட 10 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து, 3,100 ரூபாய் மதிப்பிலான புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.


Next Story