வேன் கவிழ்ந்து 12 பேர் படுகாயம்
சிவகாசி அருகே வேன் கவிழ்ந்து 12 பேர் படுகாயம் அடைந்தனர்.
சிவகாசி,
சிவகாசி அருகே வேன் கவிழ்ந்து 12 பேர் படுகாயம் அடைந்தனர்.
வேன் கவிழ்ந்தது
அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் செல்வக்குமார் (வயது 32). இவர் தனது உறவினர்கள் சிலருடன் சம்பவத்தன்று இரவு பயணிகள் வேனில் அருப்புக்கோட்டையில் இருந்து புறப்பட்டு குற்றாலம் சென்றனர். பின்னர் அங்கிருந்து எரிச்சநத்தம் வழியாக விருதுநகர் திரும்பினர். வரும் வழியில் சிவகாசியை அடுத்த எரிச்சநத்தம் கோட்டை மாரியம்மன் கோவில் அருகில் வரும் போது வேனின் டயர் திடீரென வெடித்து கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.
12 பேர் படுகாயம்
இதில் வேனில் பயணம் செய்த செல்வக்குமார், பச்சைக்கனி, நாகலட்சுமி, திருமேனி, ராஜேஸ்வரி, கார்த்திக்குமார், ஜெயலட்சுமி, ஜெயசங்கர், குணவதி, முருகேஸ்வரி, சொக்கையன், வேனை ஓட்டி வந்த டிரைவர் பாலாஜி ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
உடனே அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து கார்த்திக்குமார் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் எம்.புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.