10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 12 ஆயிரத்து 347 மாணவர்கள் எழுதினர்


10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 12 ஆயிரத்து 347 மாணவர்கள் எழுதினர்
x
தினத்தந்தி 7 April 2023 12:15 AM IST (Updated: 7 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 12 ஆயிரத்து 347 மாணவர்கள் எழுதினர்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 12 ஆயிரத்து 347 மாணவர்கள் எழுதினர்.

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு

தமிழ்நாடு முழுவதும் 10-வகுப்பு வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. மயிலாடுதுறை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடந்த 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை மாவட்ட கலெக்டர் மகாபாரதி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறுகையில்,

மயிலாடுதுறை மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வினை 6 ஆயிரத்து 600 மாணவர்களும், 6 ஆயிரத்து 225 மாணவிகளும் சேர்த்து என மொத்த 12 ஆயிரத்து 825 மாணவர்கள் எழுத இருந்த நிலையில் தமிழ் தேர்வில் 321 மாணவர்கள், 157 மாணவிகள் என 478 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை. 6 ஆயிரத்து 279 மாணவர்களும், 6 ஆயிரத்து 68 மாணவிகளும் என மொத்தம்12 ஆயிரத்து 347 பேர் மட்டுமே தேர்வு எழுதினர்.

53 மையங்கள்

மாவட்டத்தில் 50 பொதுத்தேர்வு மையங்களும், 3 தனித்தேர்வர்களுக்கான மையங்களும் என மொத்தம் 53 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுவதை கண்காணித்திட 810 அறைக்கண்காணிப்பாளர்கள், 77 பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் சொல்வதை எழுதுபவர் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வினை எழுத 138 மாணவ, மாணவிகளுக்கும் தேர்வு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு மையங்கள் அனைத்தும் தூய்மை செய்யப்பட்டு, தடையில்லா மின்சாரம் வழங்கவும், குடிநீர் வசதிகள், காவலர் உள்ளிட்ட ஏற்பாடுகள் தகுந்த முறையில் செய்யப்பட்டுள்ளன என்றார். அப்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரேணுகா உடன் இருந்தார்.


Next Story