ஓமலூர் அருகே வெல்ல ஆலையில் கலப்படத்திற்காக வைக்கப்பட்டிருந்த 12¾ டன் சர்க்கரை பறிமுதல்


ஓமலூர் அருகே வெல்ல ஆலையில் கலப்படத்திற்காக வைக்கப்பட்டிருந்த 12¾ டன் சர்க்கரை பறிமுதல்
x

ஓமலூர் அருகே வெல்லம் உற்பத்தி ஆலையில் கலப்படத்திற்காக வைக்கப்பட்டிருந்த 12¾ டன் சர்க்கரையை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சேலம்

கருப்பூர்:

சர்க்கரை, வெல்லம் பறிமுதல்

ஓமலூர் பகுதியில் கலப்பட வெல்லம் தயாரிப்பதாக உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு புகார் வந்தது. இந்த நிலையில் ஓமலூர் அருகே காமலாபுரம் எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள வெல்லம் உற்பத்தி ஆலைகளில் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கதிரவன் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு வெல்லத்தில் கலப்படம் செய்வதற்காக சர்க்கரை மூட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ஆலைகளில் கலப்படத்திற்காக 254 மூட்டைகளில் வைக்கபட்டிருந்த 12¾ டன் சர்க்கரை பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.4 லட்சத்து 31 ஆயிரத்து 800 ஆகும்.

மேலும் ஒரு ஆலையில் இருந்து செயற்கை வண்ணம் சேர்க்கப்பட்டு இருந்த 500 கிலோ கலப்பட வெல்லத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த ஆலைகளில் இருந்து மாதிரி சேகரிக்கப்பட்டு சென்னை கிண்டியில் உள்ள உணவு பகுப்பாய்வு கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

நடவடிக்கை

இதுகுறித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கூறும் போது, 'வெல்லம் உற்பத்தி ஆலைகளில் நடத்திய ஆய்வின் போது கலப்பட வெல்லம் மற்றும் சர்க்கரை ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. வெலத்தில் சர்க்கரை, ஹைட்ரோஸ், பிளிச்சிங் பவுடர், சூப்பர் பாஸ்பேட் போன்ற ரசாயனங்கள் கலப்படமாக பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட ஆலைகளின் உரிமையாளர்கள் மீது உணவு பாதுகாப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்'என்றனர்.


Next Story