12 டன் ரேஷன் அரிசி பறிமுதல்-தலைமறைவாக இருந்த நெல்லை வாலிபர் கைது
12 டன் ரேஷன் அரிசி பறிமுதல்-தலைமறைவாக இருந்த நெல்லை வாலிபர் கைது
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே மேலகாவனூர் பஸ் நிறுத்தம் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் லாரியில் கடத்தி வரப்பட்ட 12 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக மணிகண்டன் (வயது 38), தவமுருகன் (30) உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த ரேஷன் அரிசி கடத்தலில் முக்கிய நபராக கருதப்படும் ரேஷன் அரிசி உரிமையாளரான நெல்லை சங்கர்நகர் ராம்நகர் பகுதியை சேர்ந்த மாரிமுத்து மகன் கலைஞர்(43) என்பவரை போலீசார் தேடி வந்தனர். அவர் நெல்லை பகுதியில் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலை தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு சினேக ப்ரியா உத்தரவின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஆல்வின் பிரஜித் உள்ளிட்ட போலீசார் அங்கு சென்று கலைஞரை கைது செய்தனர்.