பந்தலூரிலிருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 1,200 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகள், காருடன் பறிமுதல்
பந்தலூரிலிருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 1,200 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகள், காருடன் பறிமுதல் செய்யப்பட்டது.
பந்தலூர்
பந்தலூரிலிருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 1,200 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகள், காருடன் பறிமுதல் செய்யப்பட்டது.
தீவிர கண்காணிப்பு
பந்தலூர் தாலுகா பகுதிகளிலிருந்து ரேஷன் அரிசி மூட்டைகளை கேரளாவுக்கு கடத்தப்பட்டு வந்தது. இந்த கடத்தல் மற்றும் மணல் கடத்தல்களை தடுக்கவும் பாட்டவயல், நம்பியார்குன்னு, மதுவந்தால், தாளூர், கக்குண்டி, பூலக்குன்று, கோட்டூர், மணல்வயல், சோலாடி, நாடுகாணி உள்பட பல பகுதிகளில் போலீஸ் சோதனைசாவடிகள் அமைக்கப்பட்டு கடத்தல்களை தடுப்பது மாவோயிஸ்டுகள் மற்றும் மர்மநபர்கள் நடமாட்டத்தையும் இரவு- பகலாக போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
காருடன் பறிமுதல்
இந்தநிலையில் பந்தலூர் பஜாரில் நேற்று முன்தினம் இரவு தேவாலா தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஒரு காரை போலீசார் நிறுத்திய போது காரை ஓட்டிவந்த ஒருவர் காரைநிறுத்திவிட்டு தப்பிஓடிவிட்டார். போலீசார் காரை சோதனை போட்டபோது, அதில் ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்ததும், கேரளாவுக்கு கடத்த முயன்றதும் தெரியவந்தது. மொத்தம் 1,200 கிலோ ரேஷன் அரிசி மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது. தப்பிஓடியவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.