வட்டாரக்கல்வி அலுவலருக்கான தேர்வை 1227 பேர் எழுதினர்


வட்டாரக்கல்வி அலுவலருக்கான தேர்வை 1227 பேர் எழுதினர்
x

திருவண்ணாமலையில் வட்டாரக்கல்வி அலுவலருக்கான தேர்வை 1227 பேர் எழுதினர்.

திருவண்ணாமலை

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்படும் வட்டாரக் கல்வி அலுவலருக்கான நேரடி நியமனத் தேர்வு இன்று நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை நகராட்சி அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, டேனிஷ் மிஷின் மேல்நிலைப்பள்ளி, வி.டி.எஸ். ஜெயின் மேல்நிலைப்பள்ளி, சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய 4 தேர்வு மையங்களில் இந்த தேர்வு நடைபெற்றது.

இந்த தேர்விற்காக திருவண்ணாமலை மாவட்டத்தில் 1470 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதில் 1227 பேர் தேர்வு எழுதினர். 243 பேர் தேர்வு எழுத வரவில்லை.

தேர்வு மையங்களை திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொறுப்பு) கிருஷ்ணபிரியா தலைமையிலான பள்ளிக்கல்வித் துறை அலுவலர்கள் நேரில் ஆய்வு செய்தனர்.


Next Story