பொதுவினியோக திட்டத்திற்கு 1250 டன் அரிசி


பொதுவினியோக திட்டத்திற்கு 1250 டன் அரிசி
x
தினத்தந்தி 2 Aug 2023 12:15 AM IST (Updated: 2 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூரில் இருந்து நாமக்கல்லுக்கு பொதுவினியோக திட்டத்திற்கு 1250 டன் அரிசி சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது

திருவாரூர்


திருவாரூர் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூலம் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்படும். பின்னர் இந்த நெல் மாவட்டத்தில் உள்ள அரசு அங்கீகரிக்கப்பட்ட அரவை மில்லுக்கு அனுப்பி அரிசியாக தயாரானது. இந்த அரிசி மூட்டைகள் சேமிப்பு கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டு, பொதுவினியோக திட்டத்தில் பொதுமக்களுக்கு அரிசி வழங்குவதற்காக பல மாவட்டங்களுக்கு ரெயில் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. அதன்படி நேற்று திருவாரூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து 1250 டன் பொதுரக அரிசி மூட்டைகள் லாரிகள் மூலம் திருவாரூர் ரெயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டன. பின்னர் லாரிகளில் இருந்து அரிசி மூட்டைகளை தொழிலாளர்கள் சரக்கு ரெயிலின் 42 பெட்டிகளில் ஏற்றினர். அதனை தொடர்ந்து பொதுவினியோக திட்டத்திற்காக நாமக்கல் மாவட்டத்திற்கு சரக்கு ரெயில் அனுப்பி வைக்கப்பட்டது.


Next Story