1,280 டன் உரம் மயிலாடுதுறை வந்தது


1,280 டன் உரம் மயிலாடுதுறை வந்தது
x

தூத்துக்குடியில் இருந்து சரக்குரெயில் மூலம் 1,280 டன் உரம் மயிலாடுதுறை வந்தது

மயிலாடுதுறை

காவிரி டெல்டா மாவட்டங்களான மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் தஞ்சாவூர் மாவட்டங்களில் தற்போது சம்பா, தாளடி சாகுபடி பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. இந்த மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகளுக்கு தட்டுப்பாடு இன்றி உரங்கள் கிடைக்கும் வகையில் தூத்துக்குடியில் இருந்து சரக்கு ரயில் மூலம் 780 டன் யூரியா, 250 டன் டி.ஏ.பி., 250 டன் காம்ப்ளக்ஸ் ஆகிய உர மூட்டைகள் மயிலாடுதுறை ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. பின்னர் அந்த உர மூட்டைகள் சரக்கு ரெயிலில் இருந்து இறக்கப்பட்டு லாரிகளில் ஏற்றி மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வியாபாரிகளுக்கு விற்பனை செய்வதற்காக அனுப்பி வைக்கப்பட்டது.


Next Story