திருச்சியில் விதிகளை மீறி பட்டாசு வெடித்த 13 பேர் கைது


திருச்சியில் விதிகளை மீறி பட்டாசு வெடித்த 13 பேர் கைது
x

திருச்சியில் விதிகளை மீறி பட்டாசு வெடித்த 13 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி

தீபாவளி பண்டிகை நேற்று முன்தினம் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அப்போது காலை 1 மணி நேரமும், இரவு 1 மணி நேரமும் மட்டுமே பட்டாசு வெடிக்க மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு பிறப்பித்து இருந்தது. அதன்படி, நேற்று முன்தினம் பொதுமக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். இந்தநிலையில் இந்த விதிமுறையை மீறி பட்டாசு வெடித்ததாக காந்தி மார்க்கெட் பகுதியை சேர்ந்த சாமிநாதன் (வயது 32), பாலக்கரை பகுதியை சேர்ந்த ஆல்பர்ட் நிதிஷ்குமார் (31), ஆனந்தகுமார் (21), தாமஸ் அந்தோணி (22), கோவிந்தராஜ் (30), கணேஷ் (31), செந்தில்குமரன் (20), உறையூர் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் (22), ஸ்ரீரங்கத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் (20), பிரகாஷ் (21), இ.பி.ரோடு பகுதியை சேர்ந்த முருகவேல் (48), காந்தி மார்க்கெட் பகுதியை சேர்ந்த முகமதுசாகிப் (36), தர்பார் மேடு பகுதியை சேர்ந்த ஜாபர்சையது (52) ஆகிய 13 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். பிறகு அவர்கள் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.


Next Story