தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலி: அரசு அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய வேண்டும்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியான வழக்கில் தொடர்புடைய அரசு அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.
அரியலூர்
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 22-5-2018-ந் தேதி பொதுமக்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தினர். அப்போது போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் 13 பேர் பரிதாபமாக இறநதனர். இதுகுறித்து விசாரித்து வந்த, ஓய்வு பெற்ற சென்னை ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையம், தனது பரிந்துரைகளை தமிழக அரசிடம் அளித்தது. இதுகுறித்து அரியலூர் மக்கள் கூறுகையில், தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் மனசாட்சி அற்ற நடவடிக்கையாகும். மாவட்ட கலெக்டர், போலீஸ் அதிகாரிகள் தங்களது பொறுப்பை உணர்ந்து செயல்படாமல் இருந்துள்ளனர். சென்னை ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையம் அளித்துள்ள அறிக்கையின் படி இந்த சம்பவத்தில் தொடர்புடைய அரசு அதிகாரிகளை பணிநீக்கம் செய்வதுடன், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து தண்டனை வழங்க வேண்டும் என்றனர்.
Related Tags :
Next Story