பொது இடங்களில் புகைபிடித்த 13 பேருக்கு அபராதம்
அணைக்கட்டு பகுதியில் பொது இடங்களில் புகைபிடித்த 13 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
வேலூர்
அணைக்கட்டு
அணைக்கட்டு மற்றும் ஒடுகத்தூர் பேரூராட்சியில் உள்ள சில கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா போன்ற போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் வந்தது. அதன்பேரில் வேலூர் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் பானுமதி உத்தரவின்பேரில், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஆரோக்கியநாதன் தலைமையில் ஒடுகத்தூர் ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வாளர் ராமலிங்கம், ஆய்வாளர்கள் சரவணன், சதீஷ்குமார், இன்ப நாதன், வசந்தகுமார் உள்ளிட்டோர் கொண்ட குழுவினர் ஒடுகத்தூர், மற்றும் வேப்பங்குப்பம், அணைக்கட்டு ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது விற்பனைக்காக கடைகளில் பதுக்கி வைத்திருந்த ரூ.2,200 மதிப்புள்ள புகையிலைப் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் பொது இடங்களில் புகை பிடித்த 13 பேருக்கு அபராதம் விதித்து வசூல் செய்தனர்.
Related Tags :
Next Story