13 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்; வாலிபர் கைது


13 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்; வாலிபர் கைது
x

13 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் கயர்லாபாத் சப்-இன்ஸ்பெக்டர் பூபாலன் தலைமையிலான போலீசார் விளாங்குடி சிவன் கோவில் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சாக்கு மூட்டையுடன் சென்ற வாலிபரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த மூட்டையில் 13 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. விசாரணையில் அவர் சிறுவளூர் வடக்கு தெருவை சேர்ந்த ராஜரத்தினம் (வயது 20) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் விற்பனைக்காக கொண்டு சென்ற புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.


Next Story