கோவா பகுதியில் விசைப்படகு பழுதானது: 13 குமரி மீனவர்கள் நடுக்கடலில் தவிப்பு
கோவா ஆழ்கடல் பகுதியில் விசைப்படகு பழுதானது. இதனால் 13 குமரி மீனவர்கள் நடுக்கடலில் தவிக்கிறார்கள். அவர்களை மீட்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்களின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்்து உள்ளனர்்.
கொல்லங்கோடு:

விசைப்படகு பழுதானது
குமரி மாவட்டம் தூத்தூர் மீனவ கிராமத்தை சேர்ந்த யோகதாசன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் 13 மீனவர்கள் கடந்த 2-ந் தேதி தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
கடந்த பத்து நாட்களுக்கு மேலாக கோவா ஆழ்கடல் பகுதியில் அவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தனர். இந்த நிலையில் 11-ந்தேதி படகு பழுதானது.
நடுக்கடலில் தவிப்பு
இதனால் படகை இயக்க முடியவில்லை. அதைத்தொடர்ந்து அந்த படகில் இருந்த 13 மீனவர்களும் சேட்டிலைட் போன் மூலம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் தகவலை கூறி தங்களை மீட்க உதவும்படி கோரி உள்ளனர். ஆனாலும் இதுவரை நடுக்கடலில் தத்தளிக்கும் மீனவர்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் கடந்த 3 நாட்களுக்கு மேலாக நடுக்கடலில் தத்தளிக்கும் மீனவர்களை மீட்க தேவையான நடவடிக்கைகளை மத்திய-மாநில அரசுகள் உடனடியாக எடுக்க வேண்டும் என்று மீனவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.