ரூ.13½ லட்சத்தி அங்கன்வாடி கட்டிடம்
ரூ.13½ லட்சத்தி அங்கன்வாடி கட்டிடம் கட்டும்பணியை எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
ஜோலார்பேட்டை ஒன்றியம், பொன்னேரி ஊராட்சி ராமனூர் பகுதி பொதுமக்கள் தங்களின் குழந்தைகளை பொன்னேரி பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு அனுப்பி வருகின்றனர். இதனால் ராமனூர் பகுதியில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனையடுத்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் அமைக்க ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் மூலம் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் ரூ.13½ லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் அமைப்பதற்கான தொடக்க விழா நடந்தது.
நிகழ்ச்சிக்கு ஜோலார்பேட்டை ஒன்றியக் குழு தலைவர் எஸ்.சத்யா சதீஷ்குமார் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் தினகரன், மாவட்ட கவுன்சிலர்கள் சிந்துஜா ஜெகன், கவிதா தண்டபாணி, மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ்.கே.சதீஷ்குமார், ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும், ஜோலார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ.வுமான க.தேவராஜி கலந்து கொண்டு புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் அமைப்பதற்கான பணியினை தொடங்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஜோலார்பேட்டை நகர செயலாளர் ம.அன்பழகன், ஊராட்சி மன்ற தலைவர் நந்தினி அருள், துணைத் தலைவர் அரவிந்தன், ஊராட்சி செயலாளர் சின்னத்தம்பி உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.