கரூரில் மதுவிற்ற 13 பேர் கைது; 77 மது பாட்டில்கள் பறிமுதல்


கரூரில் மதுவிற்ற 13 பேர் கைது; 77 மது பாட்டில்கள் பறிமுதல்
x

கரூரில் மதுவிற்ற 13 பேர் கைது செய்யப்பட்டனர். 77 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

கரூர்

கரூர் மாவட்டத்தில் மதுபானங்களை பதுக்கி வைத்து சிலர் அதிக விலைக்கு விற்பதாக பல்வேறு புகார் வந்தன. இதன்பேரில் மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் பத்மா தலைமையிலான போலீசார் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர். இதில், மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக மண்மங்கலத்தை சேர்ந்த பழனிச்சாமி (வயது 61), பிரியா (40), திருநெல்வேலி பகுதியை சேர்ந்த சேர்மதுரை (48), வடகம்பாடியை சேர்ந்த பானுமதி (50), கடவுரை சேர்ந்த மருதமுத்து (41), சின்னதேவன் பட்டியை சேர்ந்த மோகன்ராஜ் (47), கோபால் (50), புகழூரை சேர்ந்த சிவக்குமார் (35), வீரராக்கத்தை சேர்ந்த கந்தம்மாள் (51), அன்பரசு (43), திருக்காம்புலியூர் பகுதியை சேர்ந்த பொன்னுச்சாமி (22) ஆகிய 11 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இவர்களிடம் இருந்து மொத்தம் 67 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல் நொய்யல் அருகே மரவாபாளையத்தில் மது விற்ற மகுடீஸ்வரன், வேலாயுதம்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே மது விற்ற அருண்குமார் ஆகியோரை வேலாயுதம்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் நெப்போலியன் கைது செய்தார். இவர்களிடம் இருந்து மொத்தம் 10 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story