திருவள்ளூர் அருகே உணவில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பெண்ணிடம் 13 பவுன் நகை திருட்டு
திருவள்ளூர் அருகே உணவில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பெண்ணிடம் 13 பவுன் நகை திருடப்பட்டது.
திருவள்ளூர் அடுத்த மேல்நல்லாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி சிவசக்தி. இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை. இதனையடுத்து எறையூர் கிராமத்தில் உள்ள தர்காவில் பூஜை செய்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று அக்கம் பக்கத்தினர் இவர்களிடம் கூறியுள்ளனர்.
இதை தொடர்ந்து நேற்று முன்தினம் சண்முகம் தனது மனைவி சசிகலாவை அழைத்து கொண்டு திருவள்ளூர் தேரடியில் இருந்து ஆட்டோ மூலம் எறையூர் கிராமத்திற்கு செல்வதற்காக ஏறியுள்ளனர்.
அந்த ஆட்டோவில் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ஏற்கனவே அமர்ந்திருந்தார். தான் திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் பகுதியை சேர்ந்தவள் என தன்னை அறிமுகம் செய்து கொண்டு தானும் எறையூர் செல்வதாக கூறி அவர்களிடம் நட்பாக பழகியுள்ளார்.
அதனைத்தொடர்ந்து இரவு நேரமானதால் தர்காவில் அந்த 35 வயது பெண் உணவு வாங்கி வந்து சிவசத்தி மற்றும் சிலருக்கு கொடுத்துள்ளார். உணவு சாப்பிட்ட சிறிது நேரத்தில் சிவசக்தி உள்ளிட்ட அவர்கள் மயக்கம் அடைந்தனர்.
அப்போது சிவசக்தி அணிந்திருந்த 13 பவுன் தங்க நகையை அந்த 35 வயது மதிக்கத்தக்க பெண் திருடி சென்றுள்ளார்.
இது குறித்து சரவணன் புல்லரம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உணவு சாப்பிட்டு மயக்கமடைந்த 3 பேர் தற்போது திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.