130 மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு செயலியுடன் செல்போன்


130 மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு செயலியுடன் செல்போன்
x
தினத்தந்தி 8 Feb 2023 12:30 AM IST (Updated: 8 Feb 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில் நடந்த மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 130 மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு செயலியுடன் செல்போன்களை கலெக்டர் விசாகன் வழங்கினார்.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்ட அரங்கில், மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலெக்டர் விசாகன் தலைமை தாங்கி, மாற்றுத்திறனாளிகளிடம் குறைகள் கேட்டார். கூட்டத்தில் மாதாந்திர ஓய்வூதியம், தொழில்கடன், 3 சக்கர வாகனம் உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 60 மாற்றுத்திறனாளிகள் மனு கொடுத்தனர். அந்த மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து பார்வையற்ற மற்றும் காது கேளாத மாற்றுத்திறனாளிகள் 130 பேருக்கு, சிறப்பு செயலியுடன் கூடிய செல்போன்களை கலெக்டர் வழங்கினார். மேலும் சக்கர நாற்காலி கேட்டு மனு கொடுத்த மாற்றுத்திறனாளிக்கு உடனடியாக சக்கர நாற்காலி வழங்கப்பட்டது. பின்னர் கலெக்டர் பேசுகையில், மாற்றுத்திறனாளிகள் தொழில்கடன் பெற்று சுயதொழில் செய்து முன்னேற வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

இதில் மகளிர் திட்ட இயக்குனர் சரவணன், மாவட்ட தொழில் மைய மேலாளர் கமலக்கண்ணன், முன்னோடி வங்கி மேலாளர் அருணாச்சலம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன் மற்றும் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார்கள் கலந்து கொண்டனர்.


Next Story