இலங்கைக்கு கடத்த 2 இடங்களில் பதுக்கிய 1,300 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்


இலங்கைக்கு கடத்த 2 இடங்களில் பதுக்கிய 1,300 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்
x
தினத்தந்தி 30 Aug 2023 12:15 AM IST (Updated: 30 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

இலங்கைக்கு கடத்துவதற்காக மண்டபத்தில் 2 இடங்களில் பதுக்கிய சுமார் 1300 கிலோ கடல் அட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

ராமநாதபுரம்

பனைக்குளம்,

இலங்கைக்கு கடத்துவதற்காக மண்டபத்தில் 2 இடங்களில் பதுக்கிய சுமார் 1300 கிலோ கடல் அட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கடல் அட்டைகள்

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் கடல் பகுதியில் இருந்து இலங்கைக்கு அரிய வகை உயிரினமான கடல் அட்டைகள் கடத்தப்பட உள்ளதாக வனத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைதொடர்ந்து மண்டபம் வனத்துறையினர், வன பாதுகாப்பு படை, வன உயிரின குற்ற தடுப்பு பிரிவு படை ஆகியோர் இணைந்து மண்டபம் வடக்கு கடற்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மேற்கு தெரு பகுதியில் உள்ள ஒரு வீட்டின் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 567 கிலோ கடல் அட்டைகளை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து மண்டபம் மேற்கு தெரு பகுதியைச் சேர்ந்த பைசர் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பி ஓடிய பூமரைக்காயர், காதர் ஆகியோரை தேடி வருகின்றனர்.

ரூ.10 லட்சம்

இதேபோல் அப்பகுதியில் மற்றொரு வீட்டை சோதனை செய்தபோது அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 722 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து அதே பகுதியைச் சேர்ந்த அன்வர் சாதிக் என்பவரை கைது செய்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இலங்கைக்கு கடத்த பதுக்கிய சுமார் 1300 கிலோ கடல் அட்டைகள் ஒரே நாளில் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. இவற்றின் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.10 லட்சம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.


Next Story