ஆந்திராவில் இருந்து நாமக்கல்லுக்கு 1,300 டன் சோளம் சரக்கு ரெயிலில் வந்தது
ஆந்திராவில் இருந்து நாமக்கல்லுக்கு 1,300 டன் சோளம் சரக்கு ரெயிலில் வந்தது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோழிப்பண்ணைகளுக்கு தேவையான தீவன மூலப்பொருட்கள் பெரும்பாலும் வட மாநிலங்களில் இருந்து சரக்கு ரெயிலில் நாமக்கல்லுக்கு கொண்டு வரப்படுவது வழக்கம். அதன்படி இன்று ஆந்திர மாநிலத்தில் இருந்து 1,300 டன் சோள மூட்டைகள் சரக்கு ரெயிலில் நாமக்கல்லுக்கு கொண்டு வரப்பட்டது. 21 வேகன்களில் வந்திருந்த சோள மூட்டைகள் அனைத்தும் 70 லாரிகளில் ஏற்றப்பட்டு நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோழிப்பண்ணைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதேபோல் ஆந்திரா மாநிலத்தில் இருந்து 1,300 டன் கம்பு மூட்டைகள் சரக்கு ரெயிலில் நாமக்கல்லுக்கு கொண்டு வரப்பட்டன.. 21 வேகன்களில் வந்திருந்த கம்பு மூட்டைகள் அனைத்தும் 70 லாரிகளில் ஏற்றப்பட்டு, மாவட்டத்தில் உள்ள கோழிப்பண்ணைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை நாமக்கல் டவுன் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் நல்லதம்பி மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.