வங்கதேசத்தினர் 14 பேரை சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்க கோர்ட்டு உத்தரவு


வங்கதேசத்தினர் 14 பேரை சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்க கோர்ட்டு உத்தரவு
x

வங்கதேசத்தினர் 14 பேரை சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்க கோர்ட்டு உத்தரவு

திருப்பூர்

திருப்பூர்

திருப்பூரில் உரிய ஆவணங்கள் இன்றி தங்கி இருந்த வங்கதேசத்தினர் 14 பேரை சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்க திருப்பூர் முதன்மை மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

வங்கதேசத்தினர் 10 பேர்

திருப்பூர் நொச்சிப்பாளையம் பிரிவு அருகே வீரபாண்டி போலீசார் கடந்த மார்ச் மாதம் 14-ந் தேதி ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது வங்கதேசத்தினர் 10 பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் பாஸ்போர்ட், விசா போன்ற உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கியிருந்து பனியன் நிறுவனங்களில் பணியாற்றி வந்்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து நஷ்ருல் இஸ்லாம் (வயது 39), ஆரிப் மோலோ (28), அலமிந்ஹூசைன் (34), ஹூமுன் கபீர் (27), அஷ்ரபுல் ஆலம் (24), ஷரிப்புல் இஸ்லாம் (22), ஷாகீன் மியா (24), சைபுல் இஸ்லாம் (24), மொகத் அலாமின் (29), அபு நயீம் (21) ஆகிய 10 பேரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

இதுகுறித்த வழக்கு விசாரணை திருப்பூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. உரிய ஆவணங்கள் இன்றி தங்கிய 10 பேரையும் திருச்சியில் உள்ள அகதிகள் முகாமில் தங்க வைத்து அவர்களை சொந்த நாட்டுக்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து அதை கோர்ட்டில் தெரிவிக்க வேண்டும் என்று நீதிபதி ஸ்வர்ணம் நடராஜன் உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் திருப்பூர் மாவட்ட குற்றத்துறை அரசு வக்கீல் கனகசபாபதி ஆஜராகி வாதாடினார்.

வங்கதேசத்தினர் 4 பேர்

இதுபோல் திருப்பூர் பூம்புகார் நகர் பகுதியில் உரிய ஆவணங்கள் இன்றி தங்கி பனியன் நிறுவனங்களில் பணியாற்றிய வங்கதேசத்தை சேர்ந்த மெகபூல் சிக்தர் (35), சாகிப் அலி கான் (24), முகமது முன்னாக்கான் (32), அல் அமீன் (24) ஆகிய 4 பேரை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 4-ந் தேதி கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

இதுகுறித்த வழக்கு விசாரணை திருப்பூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. உரிய ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த 4 பேரையும் சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அதை கோர்ட்டில் தெரிவிக்க வேண்டும் என்று நீதிபதி ஸ்வர்ணம் நடராஜன் உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் திருப்பூர் மாவட்ட குற்றத்துறை அரசு வக்கீல் கனகசபாபதி ஆஜராகி வாதாடினார்.

----


Next Story