14 வீடுகள் இடித்து அகற்றம்


14 வீடுகள் இடித்து அகற்றம்
x
திருப்பூர்


திருப்பூர் ஊத்துக்குளி ரோடு மூளிக்குளத்துக்கு செல்லும் வாய்க்கால் கரையோரம் நேதாஜிநகர் வாய்க்கால் மேடு பகுதியில் 61 வீடுகள் ஓடை புறம்போக்கில் இருப்பதாக கண்டறியப்பட்டது. அவற்றை அகற்றிக்கொள்ள குடியிருப்பவர்களுக்கு அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கினார்கள். அவர்களுக்கு கடன் வசதி செய்து, நெருப்பெரிச்சல் அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

முதல்கட்டமாக 14 பேருக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு அவர்களுக்கு வீட்டின் சாவி ஒப்படைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 14 பேரும் தங்கள் பழைய வீடுகளை நேற்று காலி செய்து அடுக்குமாடி குடியிருப்பில் குடியேற புறப்பட்டனர். இதைத்தொடர்ந்து மாநகராட்சி உதவி கமிஷனர் வாசுகுமார் தலைமையிலான அதிகாரிகள், வீட்டின் மின் இணைப்பை துண்டித்து பொக்லைன் எந்திரம் மூலம் சம்பந்தப்பட்ட 14 பேரின் வாய்க்கால் மேட்டில் உள்ள வீடுகளை இடித்து அகற்றினார்கள். மீதம் உள்ளவர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு செய்ததும், இந்த வீடுகள் இடிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story