ரூ.14 லட்சம் உதவி உபகரணங்கள் வழங்கல்


ரூ.14 லட்சம் உதவி உபகரணங்கள் வழங்கல்
x

ரூ.14 லட்சம் உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டது.

கரூர்

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 54 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.14 லட்சத்து 18 ஆயிரத்து 660 மதிப்பிலான உதவி உபகரணங்களை கலெக்டர் பிரபுசங்கர் வழங்கினார். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட 10 பேருக்கு தலா ரூ.ஒரு லட்சத்து 5 ஆயிரம் மதிப்பீட்டில் ரூ.10 லட்சத்து 50 ஆயிரம் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சிறப்பு சக்கர நாற்காலியும், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் வழங்கப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது தீர்வு காணப்படும் வகையில் 40 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2,73,600 மதிப்பிலான மோட்டார் பொருத்திய தையல் எந்திரங்களும், அலிம்கோ திட்டத்தில் 4 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.95,060 மதிப்பீட்டில் செயற்கைகாலும் என மொத்தம் 54 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.14,18,660 மதிப்பில் உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டன.


Next Story