கனடாவில் வேலை வாங்கி தருவதாக ரூ.14½ லட்சம் மோசடி-சைபர் கிரைம் போலீசில் வாலிபர் புகார்


கனடாவில் வேலை வாங்கி தருவதாக ரூ.14½ லட்சம் மோசடி-சைபர் கிரைம் போலீசில் வாலிபர் புகார்
x

கனடாவில் வேலை வாங்கி தருவதாக வாலிபர் ஒருவரிடம் ரூ.14½ லட்சம் மோசடி செய்யப்பட்டதாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

சேலம்

சேலம் கொண்டலாம்பட்டி லட்சுமி நகரை சேர்ந்தவர் உமாசங்கர் (வயது 23). இவரது இணையதள முகவரிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கனடாவில் மெடிக்கல் சம்பந்தமான வேலை இருப்பதாக கூறி ஒரு தகவல் வந்தது. இதனை உண்மை என்று நம்பிய அவர், அதில் தெரிவிக்கப்பட்டிருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது எதிர்முனையில் பேசியவர், கனடாவுக்கு வர வேண்டும் என்றால் விசா, மருத்துவ பரிசோதனை, பயங்கரவாத எதிர்ப்பு சான்றிதழ் ஆகியவற்றை வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் விசா வாங்குவதும், மருத்துவ பரிசோதனை செய்து கொள்வதும் எளிது. ஆனால் பயங்கரவாத எதிர்ப்பு சான்றிதழ் பெறுவது கடினம். இதற்காக அதிகளவில் பணம் தேவைப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து 24 தவணையாக அவர்கள் கொடுத்த வங்கி கணக்கிற்கு உமாசங்கர் தனது வங்கி மற்றும் தந்தையின் வங்கி கணக்கில் இருந்து ரூ.14 லட்சத்து 63 ஆயிரத்து 800-ஐ அனுப்பி வைத்துள்ளார். ஆனால் கனடாவில் வேலை எதுவும் வாங்கி தராமல் மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து சேலம் மாநகர சைபர்கிரைம் போலீசில் உமாசங்கர் புகார் செய்தார். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் சந்தோஷ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.


Next Story