டம்மி வெடிகுண்டுகளுடன் சிக்கிய 14 பேர்
ராமேசுவரத்தில் பாதுகாப்பு ஒத்திகை நடந்தது. அப்போது தீவிரவாதிகள் போல் டம்மி வெடிகுண்டுகளுடன் வந்த 14 பேர் சிக்கினர்.
ராமேசுவரம்,
பாதுகாப்பு ஒத்திகை
தமிழகம் முழுவதும் உள்ள கடல் பகுதிகளில் நேற்று கவாச் என்ற பெயரில் பாதுகாப்பு ஒத்திகையா நடைபெற்றது. இந்த பாதுகாப்பு ஒத்திகையின் முக்கிய நோக்கம் மாறுவேடத்தில் தீவிரவாதிகள் போல் வேடமிட்டு வரும் நபர்களை பிடிப்பதே ஆகும். அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள கடல் பகுதிகளில் பாதுகாப்பு ஒத்திகை நேற்று காலை 6 மணியில் இருந்து தொடங்கி இன்று மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.
பாதுகாப்பு ஒத்திகையை தொடர்ந்து ராமேசுவரம், தனுஷ்கோடி, பாம்பன் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் கடலோர போலீசார், தனிப்பிரிவு, க்யூ பிரிவு போலீசாரும் தீவிரரோந்து பணியில் ஈடுபட்டனர். முக்கிய இடங்களான ராமேசுவரம் கோவில், பாம்பன் ரோடு பாலம், உணவு பொருள் குடோன் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
டம்மி வெடிகுண்டு
அப்போது ராமேசுவரம் துறைமுகம் உணவு பொருள் பாதுகாப்பு குடோன், ராமேசுவரம் கோவில், பாம்பன் ரோடு பாலம் இடங்களில் தாக்குதல் நடத்துவதற்காக டம்மி வெடிகுண்டுகளுடன் வந்த 14 பேரை போலீசார் பிடித்தனர். அவர்கள் 14 பேரும் பாதுகாப்பு ஒத்திகைக்காக டம்மி வெடிகுண்டம்மி வெடிகுண்டுகளுடன் சிக்கிய 14 பேர்டுகளுடன் அனுப்பப்பட்ட கடலோர காவல் படை கமாண்டோ வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் தொண்டி முதல் தேவிபட்டினம் வரை மரைன் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அய்யனார் தலைமையில், சிறப்பு சப்-இன்ஸ்பெ்கடர் மாணிக்கம், தனிப்பிரிவு ஏட்டு இளையராஜா மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.