மது விற்ற 14 பேர் கைது


மது விற்ற 14 பேர் கைது
x

லாலாபேட்டை, தரகம்பட்டி பகுதிகளில் மது விற்ற 14 பேர் கைது செய்யப்பட்டனர்.

கரூர்

11 பேர் கைது

கரூர் மாவட்டம், லாலாபேட்டை போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பழைய ஜெயங்கொண்டத்தை சேர்ந்த ராஜூ (வயது 60), புணவாசிப்பட்டியை சேர்ந்த பன்னீர்செல்வம் (70), கம்மநல்லூரை சேர்ந்த மணிகண்டன் (35), மேட்டு மகாதானபுரத்தை சேர்ந்த சண்முகம் (45), ஓமாந்தூரை சேர்ந்த ரமேஷ், மகாதானபுரத்தை சேர்ந்த மஞ்சுளா, மேல பஞ்சப்பட்டியை சேர்ந்த மலர், வேங்காம்பட்டியை சேர்ந்த தங்கராஜ்.கே.பேட்டையை சேர்ந்த மயில்வாகனன், வேங்கம்பட்டியை சேர்ந்த சிவகுமார், மலையாண்டிபட்டியை சேர்ந்த பழனியாண்டி ஆகிய 11 பேர் அந்தந்த பகுதிகளில் மது விற்று கொண்டிருந்தனர். இதையடுத்து 11 பேரையும் லாலாபேட்டை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

தரகம்பட்டி

தரகம்பட்டி அருகே கடவூர் வட்டம் வாழ்மங்கலம் பகுதியில் உள்ள தனது பெட்டிக்கடையில் மது விற்று கொண்டிருந்த நாச்சிபட்டியை சேர்ந்த பழனிச்சாமி என்பவரை சிந்தாமணிப்பட்டி போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 4 மதுபாட்டில்கள், ரூ.2 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல், சுக்காம்பட்டி பகுதியை சேர்ந்த மாரியம்மாள் என்பவர் தனது வீட்டின் பின்புறமும், புங்கம்பாடி பகுதியில் தங்கராஜ் என்பவரும் மது விற்று கொண்டிருந்தனர். இதையடுத்து 2 பேரையும் பாலவிடுதி போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த மொத்தம் 15 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story