எருது விடும் விழாவில் மாடு முட்டியதில் 14 பேர் படுகாயம்


எருது விடும் விழாவில்  மாடு முட்டியதில் 14 பேர் படுகாயம்
x

எருது விடும் விழாவில் மாடு முட்டியதில் 14 பேர் படுகாயம் அடைந்தனர்.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை

எருது விடும் விழாவில் மாடு முட்டியதில் 14 பேர் படுகாயம் அடைந்தனர்.

நாட்டறம்பள்ளி தாலுகா கூத்தாண்டகுப்பம் கிராமத்தில் எருது விடும் திருவிழா நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் காளைகளை உரிமையாளர்கள் கொண்டு வந்திருந்தனர்.

வருவாய் கோட்டாட்சியர் லட்சுமி நாட்டறம்பள்ளி தாசில்தார் குமார் தலைமையில் விழா குழுவினர் உறுதி மொழி ஏற்றனர் அதன் பிறகு வருவாய் துறை அதிகாரிகளின் முறையான அனுமதியுடன் தீயணைப்பு துறை மருத்துவ துறை கால் நடை மருத்துவர்கள் பரிசோதனைக்கு பிறகு அனுமதி வழங்கிய சுமார் 250-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்து ஓடின. குறிப்பிட்ட தூரத்தை குறைந்த நேரத்தில் ஓடிக் கடந்து வெற்றி பெற்ற காளைகளுக்கு முதல் பரிசாக ரூ.60 ஆயிரம், இரண்டாவது பரிசாக ரூ.45 ஆயிரம், 3-வது பரிசாக ரூ.31 ஆயிரம் உள்பட மொத்தம் 46 பரிசுகள் வழங்கப்பட்டன.

விழாவின்போது மாடு முட்டியதில் 14 பேர் படுகாயமடைந்தனர் அவர்களில் 2 பேர் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சிகிச்சை பெற்று வருகின்றனர் இதனையொட்டி வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தலைமையில் சுமார் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story