போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் 14 பேருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டது.
போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் 14 பேருக்கு பதவி உயர்வு
தமிழக காவல் துறையில் ஆயுதப்படையில் பணியாற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்களுக்கு துணை போலீஸ் சூப்பிரண்டாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி திருச்சி மாவட்ட ஆயுதப்படை இன்ஸ்பெக்டர்கள் எஸ்.நவநீதகிருஷ்ணன் கரூர் மாவட்ட ஆயுதப்படைக்கும், எஸ்.சோமசுந்தரம் பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படைக்கும், திருச்சி மண்டல ஐ.ஜி. அலுவலகத்தில் பணியாற்றிவந்த இன்ஸ்பெக்டர் கே.சரவணன் வேலூர் மாவட்ட ஆயுதப்படைக்கும், புதுக்கோட்டை மாவட்ட ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் சத்தியநாதன் சிவகங்கை மாவட்ட ஆயுதப்படைக்கும் துணை போலீஸ் சூப்பிரண்டாக பதவி உயர்வு பெற்று பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுபோல் சென்னை பெருநகரம் ஆயுதப்படையில் 6 பேருக்கும், நாகை மாவட்டத்தில் 2 பேருக்கும், மதுரை, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கும் துணை போலீஸ் சூப்பிரண்டாக பதவி உயர்வு வழங்கப்பட்டு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் பணீந்திர ரெட்டி பிறப்பித்துள்ளார்.