பிளஸ்-2 பொதுத்தேர்வை 14 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர்


பிளஸ்-2 பொதுத்தேர்வை 14 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர்
x
தினத்தந்தி 13 March 2023 12:15 AM IST (Updated: 13 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் மாவட்டத்தில் இன்று பிளஸ்-2 பொதுத்தேர்வை 14 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர்.

திருவாரூர்

கொரடாச்சேரி:

திருவாரூர் மாவட்டத்தில் இன்று பிளஸ்-2 பொதுத்தேர்வை 14 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர்.

பிளஸ்-2 பொதுத்தேர்வு

தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று(திங்கட்கிழமை) முதல் தொடங்குகிறது. திருவாரூர் மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வை 6 ஆயிரத்து 528 மாணவர்களும், 7 ஆயிரத்து 502 மாணவர்களும் என மொத்தம் 14 ஆயிரத்து 30 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். 69 மையங்களில் பிளஸ்-2 தேர்வு நடைபெறுகிறது. இதில் 116 மாற்றுத்திறனாளி மாணவர்களும் தேர்வு எழுதுகின்றனர்.

ஒரு மணி நேரம் சலுகை

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு அரசின் வழிக்காட்டுதலின்படி சொல்வதை எழுதுபவர், ஏதேனும் ஒரு மொழிப்பாடம் எழுதுவதில் விலக்கு, கூடுதலாக ஒரு மணிநேரம் ஆகிய சலுகைகள் அரசுத் தேர்வுகள் இயக்குனரால் வழங்கப்பட்டுள்ளன.

தேர்வுக்கான வினாத்தாள்கள் 6 மையங்களில் வைக்கப்பட்டுள்ளது. இம்மையங்களில் 24 மணிநேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

5 பறக்கும் படை

இந்த தேர்வு பணிக்கு 1,161 ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் ஈடுபட உள்ளனர். தேர்வுகளை கண்காணிக்க கல்வித்துறை அலுவலர்கள் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் தலைமையில் 5 பறக்கும்படை அமைக்கப்பட்டுள்ளது.

அனைத்துத்தேர்வு மையங்களிலும் போலீசாருடன் இணைந்து 89 நிலையான பறக்கும் படை அமைக்கப்பட்டு தேர்வுகளில் எவ்வித முறைகேடும் நடைபெறாமல் கண்காணிக்கப்படுகிறது.

பிளஸ்-1 பொதுத்தேர்வு நாளை தொடக்கம்

பிளஸ்-1 பொதுத்தேர்வு நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. இந்த தேர்வை 5 ஆயிரத்து 741 மாணவர்கள், 6 ஆயிரத்து 986 மாணவிகள் என மொத்தம் 12 ஆயிரத்து 727 மாணவ, மாணவிகள் 55 மையங்களில் எழுத உள்ளனர்.


Next Story