வேனில் கடத்திய 1,400 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்


வேனில் கடத்திய 1,400 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 9 Dec 2022 1:00 AM IST (Updated: 9 Dec 2022 1:00 AM IST)
t-max-icont-min-icon

சேலம் சூரமங்கலத்தில் வேனில் கடத்திய 1,400 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

சேலம்

சேலம்:-

சேலம் சூரமங்கலம் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக சேலம் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையில் போலீசார் நேற்று சூரமங்கலம் ரெட்டிப்பட்டி ரவுண்டானா அருகில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த வேனை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் 28 மூட்டைகளில் சுமார் 1,400 கிலோ ரேஷன் அரிசியை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து ரேஷன் அரிசியை கடத்தி விற்க முயன்றதாக சேலம் மணியனூர் காத்தாயம்மாள் நகரை சேர்ந்த கண்ணன் (வயது 42), நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பருத்திபள்ளி பகுதியை சேர்ந்த ராஜா (37) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் ரேஷன் அரிசி மூட்டைகளை எந்த ஊருக்கு கடத்தப்படுகிறது? இதற்கு உடந்தையாக இருந்தவர்கள் யார்? யார்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


Next Story