மக்கள் நீதிமன்றம் மூலம் 1,411 வழக்குகளுக்கு தீர்வு


மக்கள் நீதிமன்றம் மூலம் 1,411 வழக்குகளுக்கு தீர்வு
x
தினத்தந்தி 12 Feb 2023 12:15 AM IST (Updated: 12 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

குமரியில் நடந்த மக்கள் நீதிமன்றம் மூலம் 1,411 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

குமரியில் நடந்த மக்கள் நீதிமன்றம் மூலம் 1,411 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

மக்கள் நீதிமன்றம்

குமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில், பூதப்பாண்டி, இரணியல், குழித்துறை மற்றும் தக்கலை ஆகிய 5 கோர்ட்டுகளில் நேற்று மக்கள் நீதிமன்றம் நடந்தது.

இதில் குடும்ப நலவழக்கு, வாகன விபத்து இழப்பீடு, சொத்து பிரச்சினை, செக் மோசடி உள்ளிட்ட நிலுவை வழக்குகள் என மொத்தம் மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்து 67 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

1,411 வழக்குகளுக்கு தீர்வு

விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வழக்குகளில் பேச்சுவார்த்தை மூலம் 1,411 வழக்குகளுக்கு சுமூக தீர்வு காணப்பட்டுள்ளது. மேலும் ரூ.9 கோடியே 33 லட்சத்து 43 ஆயிரத்து 173 வசூலிக்கப்பட்டு சம்பந்தப்பட்டவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

நாகர்கோவில் கோர்ட்டில் நடந்த நிகழ்ச்சியை மாவட்ட முதன்மை நீதிபதி அருள்முருகன் தொடங்கி வைத்தார். மாவட்ட தலைமை குற்றவியல் நீதிபதி மாயகிருஷ்ணன், முதன்மை சார்பு நீதிபதி சொர்ணகுமார், சட்டப்பணிகள் குழு செயலாளர் நம்பிராஜன் மற்றும் சார்பு நீதிபதிகள், வக்கீல்கள், வழக்கு தொடர்ந்தவர்கள், எதிர் மனுதாரர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story