142 கோடி மக்களும் பிரதமர் மோடியின் குடும்பமே; அண்ணாமலை பேச்சு


142 கோடி மக்களும் பிரதமர் மோடியின் குடும்பமே; அண்ணாமலை பேச்சு
x
தினத்தந்தி 4 March 2024 6:49 PM IST (Updated: 4 March 2024 6:55 PM IST)
t-max-icont-min-icon

பிரதமர் மோடி, நாட்டு மக்களின் நலனுக்காக தன்னுடைய வாழ்க்கையை யோகியாக அர்ப்பணித்துள்ளார் என அண்ணாமலை பேசியுள்ளார்.

சென்னை,

தெலுங்கானா மாநிலம் அடிலாபாத் மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று விட்டு சென்னைக்கு வருகை தந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

சென்னை விமான நிலையம் வந்தடைந்த அவர், பின்னர் சாலை வழியே நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்திற்கு வந்து சேர்ந்துள்ளார். அவரை கட்சியின் முக்கிய பிரமுகர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் பூக்களை தூவி, உற்சாகத்துடன் வரவேற்றனர்.

பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு சென்னையில் 15 ஆயிரம் போலீசார் கொண்ட ஐந்து அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பா.ஜ.க. பொதுக்கூட்ட மேடையின் முகப்பில் மீண்டும் 'மோடி சர்க்கார்' என எழுதப்பட்டுள்ளது. இந்த பொதுக்கூட்ட மேடையில் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

இதன்படி, ஜி.கே. வாசன், ஏ.சி. சண்முகம், பாரிவேந்தர், தேவநாதன் யாதவ், ஜான்பாண்டியன் உள்ளிட்டோர் மேடையில் உள்ளனர். கூட்டத்தில் மத்திய இணை மந்திரி எல். முருகன் பேசினார். அவரை தொடர்ந்து தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூட்டத்தில் பேசும்போது, பிரதமர் மோடிக்கு குடும்பம் இல்லை என லாலு பிரசாத் கூறுகிறார்.

142 கோடி மக்களும் பிரதமர் மோடியின் குடும்பமே. தன்னுடைய குடும்பத்தினரை பார்க்க பிரதமர் மோடி தமிழகத்திற்கு வருகை தந்திருக்கிறார். நாட்டு மக்களின் நலனுக்காக தன்னுடைய வாழ்க்கையை யோகியாக அர்ப்பணித்துள்ளார் பிரதமர். நாம் இந்த தேர்தலில், பட்டிதொட்டி முழுவதும் ஒரு குடும்பம் ஆக பா.ஜ.க. உள்ளது என காட்ட வேண்டும்.

இந்திய அரசியலில் அடுத்த 60 நாட்கள் மிக முக்கியம் வாய்ந்தவை. தி.மு.க. உள்ளிட்ட வாரிசு அரசியல் செய்யும் குடும்பங்களை மக்களவை தேர்தலில் அகற்ற வேண்டும். தன்னுடைய வாழ்க்கை முழுவதும் நாட்டுக்காக அர்ப்பணித்த பிரதமர் மோடிக்கு நாடே ஒரு குடும்பம்தான் என்று பேசியுள்ளார்.

பிரதமர் மோடிக்கு, பனை தொழிலாளர்களின் உபகரணங்கள் பரிசாக அளிக்கப்பட்டு உள்ளது. பிரதமர் மோடி, ஒரு யோகியை போன்று செயல்படுகிறார். சாராயம் கடத்துபவர்கள், கஞ்சா விற்பனைக்கு முதல் மரியாதை அளிக்கப்படுகிறது. ஆனால், அடுத்த 25 ஆண்டுகளுக்கான திட்டங்களை பிரதமர் மோடி கையில் வைத்துள்ளார் என பேசியுள்ளார்.

பிரதமர் மோடி, 400 சீட்டுகளுக்கு மேல் வெற்றி பெறுவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தமிழ்நாட்டில் இருந்து 39 எம்.பி.க்களை நாம் மக்களவைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று அவர் கேட்டு கொண்டார்.


Next Story