14321 மாணவ-மாணவிகள் பிளஸ்-2 தேர்வு எழுதுகின்றனர்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 14321 மாணவ-மாணவிகள் பிளஸ்-2 தேர்வு எழுதுகின்றனர்
ராணிப்பேட்டை
தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு 13-ந் தேதி (திங்கட்கிழமை) தொடங்குகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 63 தேர்வு மையங்களில் பிளஸ் -2 தேர்வை 14 ஆயிரத்து 321 மாணவ- மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்.
பிளஸ்-2 மற்றும் பிளஸ்-1 பொதுத்தேர்வில் மாணவ, மாணவிகள் காப்பி அடிப்பதை தடுக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் 130 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
இதேபோல் மாணவ- மாணவிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்து செய்யப்பட்டு, தேர்வு மையங்கள் தயார் நிலையில் உள்ளது. மேலும் அனைத்து தேர்வு மையங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட உள்ளனர்.
Related Tags :
Next Story