நீலகிரி மாவட்டத்தில் 1,439 மைங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்- கலெக்டர் அம்ரித் தகவல்


நீலகிரி மாவட்டத்தில்  1,439 மைங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்- கலெக்டர் அம்ரித் தகவல்
x

நீலகிரி மாவட்டத்தில் 1,439 மைங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடக்கிறது என்று கலெக்டர் அம்ரித் தெரிவித்தார்.

நீலகிரி

ஊட்டி

தமிழகத்தில் மீண்டும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் மீண்டும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை துரிதப்படுத்தி உள்ளது. அதன்படி நீலகிரி மாவட்டத்தில் வருகிற 10-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடக்கிறது. அதன்படி 1439 மையங்கள் அமைக்கப்பட்டு கொரோனா தடுப்பூசி முகாம்கள் மற்றும் 60 நடமாடும் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடக்கிறது. இந்த முகாம் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்படும். முகாமில் தடுப்பு ஊசி செலுத்துபவர், கிராம சுகாதார செவிலியர்கள், தரவு பதிவாளர், அங்கன்வாடி பணியாளர்கள் என மொத்தம் 4 பணியாளர்கள் ஒரு முகாமில் பணியில் இருப்பார்கள். மொத்தமாக 1,439 முகாம்களுக்கு 5, 996 பணியாளர்கள் பணியில் ஈடுபடுவர். இந்த முகாமில் முதல் மற்றும் 2-ம் தவணை தடுப்பூசி, மேலும் 60 வயதிற்கு மேற்பட்ட முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்தப்பட வேண்டியவர்கள் கலந்து கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த தகவல் நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story