திருச்சியில் 4 கிராமங்களுக்கு 144 தடை உத்தரவு
கோவில் திருவிழாவை நடத்துவது தொடர்பாக இரு தரப்பினரிடையே மோதல் உருவாகும் சூழல் காரணமாக தடை உத்தரவு பிறப்பிப்பிக்கப்பட்டுள்ளது.
திருச்சி, லால்குடி அருகே உள்ள அன்பில், கீழ் அன்பில், ஜங்கமராஜபுரம், மங்கம்மாள்புரம் ஆகிய 4 கிராமங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மார்ச் 8ம் தேதி மதியம் 2 மணி வரை 144 தடை உத்தரவு நீடிக்கும் என லால்குடி கோட்டாட்சியர் வைத்தியநாதன் உத்தரவிட்டுள்ளார்.
அன்பில் கிராமத்தில் உள்ள ஆச்சிராம வள்ளியம்மன் கோவில் திருவிழாவை நடத்துவது தொடர்பாக இரு தரப்பினரிடையே மோதல் உருவாகும் சூழல் காரணமாக தடை உத்தரவு பிறப்பிப்பிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story